கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் தமிழ்நாட்டின் 2-வது பெரிய பத்திரிகையாளர் அமைப்பாகும். 1996ம் ஆண்டு துவங்கப்பட்ட மன்றம், தற்போது வெள்ளிவிழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
கோவையின் முக்கிய, முன்னணி பத்திரிகைகள், செய்தி ஊடகங்களைச் சேர்ந்த 150 செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள், ஒளிப்பதிவு கலைஞர்கள், உதவி ஆசிரியர்கள், பெருமை மிகுந்த இந்த மன்றத்தில் உறுப்பினர்களாகவும், நிர்வாகிகளாகவும் இருந்து வருகின்றனர்.
கால்நூற்றாண்டு காலமாக கோவை மாநகரம், மாவட்டத்தின் வரலாற்றுடன் இணைந்து பயணித்து வரும் இந்தமன்றம், பத்திரிகை-ஊடகத்துறையினரின் நலன்களுக்காகவும், ஜனநாயகத்தின் மாண்பைக் காக்கும் சேவையுடன் கோவை மக்களின் நலன்களுக்காகவும் களப்பணியாற்றி வருகிறது.
நாட்டின் எந்தப்பகுதியில் புயல், பெருவெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படும் போதும், கொரோனா போன்ற மருத்துவ அவசரநிலை காலங்களிலும் பாதிக்கப்படும் மக்களுக்காக உதவிக்கரம் நீட்டுவதிலும் முன்வரிசையில் நின்று வருகிறது கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம்.